முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் இன்று இறுதிக்கட்ட தேர்தல்: பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2024      இந்தியா
Kashmir 2024-03-30

ஜம்மு, ஜம்மு காஷ்மீரில் இன்று இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 

ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த 18-ம் தேதி முதற்கட்டமாக 24 தொதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து 25-ம் தேதி 26 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 3-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. 

குப்வாரா உள்ளிட்ட மாவட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு எந்திரங்கள் கொண்டு செல்லும் பணி    தொடங்கியது.

வாக்கு எந்திரங்கள் வாக்கு மையத்திற்குச் சென்றதும் இன்று காலை வாக்குப்பதிவுக்கு முன் மாதிரி வாக்குகள் செலுத்தப்பட்டு எந்திரம் சரியாக வேலை செய்கிறதா? என முகவர்கள் முன் வைத்து பரிசோதிக்கப்படும். அதன்பின் 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும். 

இது குறித்து குப்வாரா துணை கமிஷனர் கூறுகையில், 

குப்வாரா மாவட்டத்தில் ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 4 மையங்களில் இருந்து அனுப்பப்படுகினற்ன. பலத்த பாதுகாப்புடன் 622 வாக்கு மையங்களுக்கு அதிகாரிகள் வாக்கு எந்திரங்களை கொண்டு செல்கின்றனர். 

போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு பிங் மையம், ஒரு க்ரீன்  மையம் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து