முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி குறித்த கருத்து வெறுக்கத்தக்கது : கார்கேவுக்கு அமித்ஷா கண்டனம்

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2024      இந்தியா
Amit-Shah 2023-11-26

Source: provided

புதுடெல்லி : பிரதமர் நரேந்திர மோடி குறித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்து முற்றிலும் வெறுக்கத்தக்கது, அவமானகரமானது என்று பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின்  பேச்சு, முற்றிலும் வெறுக்கத்தக்கதாகவும், அவமானகரமானதாகவும் இருந்தது. இவ்விஷயத்தில் அவர், தனது கட்சித் தலைவர்களையும், கட்சியையும் விட விஞ்சி விட்டார்.

அவரது பேச்சில் வெறுப்பின் கசப்பு வெளிப்பட்டது. பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றிய பிறகுதான் தான் இறப்பேன் என்று கூறி தேவையில்லாமல் தனது தனிப்பட்ட உடல்நல விஷயங்களில் பிரதமர் மோடியை இழுத்துள்ளார்.

பிரதமர் மோடி மீது காங்கிரசுக்கு எவ்வளவு வெறுப்பும் அச்சமும் இருக்கிறது என்பதையும், அவர்கள் எவ்வாறு பிரதமர் மோடி குறித்தே தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் இது காட்டுகிறது.

கார்கே, ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வழ வேண்டும் என்று அவருக்காக பிரதமர் மோடி பிரார்த்திக்கிறார். நான் பிரார்த்திக்கிறேன். நாங்கள் எல்லோருமே பிரார்த்திக்கிறோம். அவர் பல்லாண்டு காலம் வாழட்டும், 2047-க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா உருவாகும் வரை வாழட்டும். இவ்வாறு அந்த பதிவில் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து