முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய மகளிர் அணி சாதனை

சனிக்கிழமை, 29 ஜூன் 2024      விளையாட்டு
Woman 2023-12-16

Source: provided

சென்னை : டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ஸ்கோர் (603 ரன்கள்) எடுத்து இந்திய மகளிர் அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளது.

இருவரும் சதமடித்து... 

இந்தியா-தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை திறம்பட சமாளித்தனர். பொறுப்பாக ஆடிய இருவரும் சதமடித்து அசத்தினர்.

ஷபாலி வர்மா... 

ஷபாலி வர்மா-ஸ்மிரிதி மந்தனா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 292 ரன்கள் சேர்த்த நிலையில், மந்தனா 149 ரன் எடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய சுபா சதீஷ் 15 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ஷபாலி வர்மாவுடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆடிய ஷபாலி வர்மா இரட்டை சதம் அடித்து, 205 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து ஜெமிமா 55 ரன்னிலும் அவுட்டானார். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 98 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 525 ரன்கள் குவித்தது. இதன்மூலம் மகளிர் டெஸ்ட் போட்டியில் 1 நாளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையை இந்திய மகளிர் அணி படைத்தது.

ஒரு இன்னிங்சில்...

இந்நிலையில், நேற்று 2-ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 69 ரன்னும், ரிச்சா கோஷ் 86 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். இதன்மூலம் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோர் (603) விளாசிய அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதற்குமுன் 2024 பிப்ரவரியில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், ஆஸ்திரேலிய அணி 575 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அடுத்ததாக தனது முதல் இன்னிங்கில் களமிறங்கியுள்ள தென்னாப்பிரிக்கா அணி 1 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் அடித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து