முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலில் தனித்து நின்றாலும் வெற்றி பெறும் வலிமை காங்கிரசுக்கு உள்ளது: செல்வபெருந்தகை பேட்டி

வியாழக்கிழமை, 18 ஜூலை 2024      தமிழகம்      அரசியல்
Selvaperunthagai-(Cong )

 திருவள்ளூர், தேர்தலில் தனித்து நின்றாலும், வெற்றி பெறும் வலிமையுடன் உள்ளோம்  என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார். 

திருவள்ளூர் நகர காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் செல்வப்பெருந்தகை பேசியதாவது: 

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போன்று காங்கிரஸ் தற்போது இல்லை. அனைத்து இடங்களிலும் வலிமையாக உள்ளது. தனியாக நின்றாலும் வெற்றி பெறும் அளவுக்கு நமது கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். 

2021 சட்டசபை தேர்தலின் போதும், 2024 லோக்சபா தேர்தலின் போதும் எங்களுக்கு உரிய அங்கீகாரம், மரியாதை தரவில்லை. ஏதோ ஒரு விதத்தில் உதாசீனபடுத்துகிறார்கள்.  மரியாதை எங்களுக்கு வேண்டும் என்று சொல்கிறார்கள். அனைத்து நகர, வட்டார, மாவட்ட தலைவர்களும், எங்களுக்கு உரிய அங்கீகாரம் எப்போது கிடைக்கும். 

கடந்த 2 , 3 தேர்தலில் அது சரியாக இல்லை என்கின்றனர். நாம் வலிமையாக இருந்தால், நமக்கு உரிய மரியாதையும், அங்கீகாரமும் கிடைக்கும். அதற்கு கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், 

கூட்டத்தில் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று தான் கூறினேன். தற்போது 9 தொகுதிகள் கொடுக்கின்றனர். ஓட்டு வங்கி அதிகரிக்கும் போது 20 தொகுதிகள் கொடுக்கிறோம் என கூட்டணி கட்சியை சொல்ல வைக்கும் அளவுக்கு தொண்டர்கள் பணியாற்ற வேண்டும்.

பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் இப்படித்தான் பேச வேண்டும் என்பது விதி. தொண்டர்களை நாங்கள் உற்சாகபடுத்தாமல் வேறு யார் செய்ய முடியும். சித்தாந்தம், கொள்கை கோட்பாடு உள்ள கட்சி காங்கிரஸ்தான். பா.ஜ.க.விடம் ஒன்றும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து