முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவல் துறையின் கேள்விகளுக்கு பதில் அளித்து விட்டோம்: மாநாடு தேதியை விரைவில் விஜய் அறிவிப்பார்: புஸ்ஸி ஆனந்த் தகவல்

வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2024      தமிழகம்
Bussy-Anand 2023-11-03

Source: provided

விழுப்புரம் : விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ள த.வெ.க. மாநாடு தொடர்பாக காவல் துறை கேட்ட 21 கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. காவல் துறை அனுமதி கிடைத்த பிறகு, மாநாடு தேதியை கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.

விழுப்புரத்தில் த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக, கட்சியின் தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி, கட்சியின் முதல் மாநாட்டுக்கு அனுமதி கேட்டு விழுப்புரம் மாவட்ட காவல் துறையிடம் கடிதம் கொடுத்திருந்தோம். அந்தக் கடிதத்தின் அடிப்படையில், காவல் துறையினர் 21 கேள்விகளை எழுப்பியிருந்தனர். அந்த 21 கேள்விகளுக்கான பதில்களை நாங்கள்   கொடுத்திருக்கிறோம்.

மேலும், மாநாட்டுக்கான அனுமதி அளிப்பது குறித்து காவல் துறையினர் ஓரிரு நாட்களில் உயர் அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து விட்டு அறிவிப்பதாக கூறியுள்ளனர். அதன்பிறகு, மாநாடு நடைபெறும் தேதியை கட்சியின் தலைவர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்றார்.

விக்கிரவாண்டியில் தான் மாநாடு நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு, விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த அனுமதி கேட்டு காவல் துறையிடம் கடிதம் கொடுத்திருக்கிறோம். காவல் துறை எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் நாங்கள் பதில் அளித்திருக்கிறோம். காவல் துறை அனுமதி குறித்து அறிவித்த பிறகு, கட்சியின் தலைவர் விஜய் மாநாடு நடைபெறும் தேதியை அதிகார்பூர்வமாக அறிவிப்பார் என்று தெரிவித்தார்.

காவல் துறை காலதாமதம் ஏற்படுத்துவதாக நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு, ஏற்கெனவே கொடுத்த கடிதத்துக்கு 5 நாட்களில் பதிலளிக்க வேண்டும் என்று காவல் துறை கூறியிருந்தது. அதனடிப்படையில் நாங்கள் பதில் அளித்துள்ளோம். காவல் துறை எழுப்பிய கேள்விகள் குறித்த கடிதத்தை திங்கள்கிழமையன்று நாங்கள் பெற்றோம். 5-வது நாளான இன்று(நேற்று) பதில் கடிதம் கொடுத்துள்ளோம். எனவே, அவர்கள் மேலதிகாரிகளிடம் கலந்துபேசி நல்ல பதிலை தருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து