முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த வாரம் காஷ்மீர் செல்கிறார் பிரதமர் மோடி: 3 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்

வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2024      இந்தியா
Modi 2023-08-21

ஜம்மு, சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட பிரதமர் மோடி அடுத்த வாரம் காஷ்மீர் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஸ்ரீநகர், ஜம்மு உள்பட 3 இடங்களில் பொதுக்கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைக்கு வருகிற 18, 25, அக்டோபர் 1-ம் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ்-தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி மற்றும் மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

மொத்தம் 90 தொகுதிகள் கொண்ட காஷ்மீரில் ஆட்சியை பிடிக்க பாரதிய ஜனதாவுக்கும், காங்கிரசு கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. தேர்தலை முன்னிட்டு முதல் கட்சியாக காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்தது. நேற்று முன்தினம் முதல் நபராக ராகுல் காந்தி பிரச்சாரம் செய்து காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். 

இந்த நிலையில்  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  இன்று ஜம்மு பிராந்தியத்தில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார். பிரதமர் மோடி அடுத்த வாரம் காஷ்மீர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காஷ்மீரில் அவர் ஸ்ரீநகர், ஜம்மு உள்பட 3 இடங்களில் பொதுக்கூட்டத்தில் பேசி பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவார் என்று தெரியவந்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்த 370-வது சட்டப்பிரிவை நீக்கிய பிறகு பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை அந்த மாநிலத்துக்கு அறிவித்தார். தற்போது அவர் பிரச்சாரம் செய்வதன் மூலம் பாரதிய ஜனதாவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்று பா.ஜ.க. தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து