முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கென்யாவில் பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 17 மாணவர்கள் பலி

வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2024      உலகம்
Kenya 2024-09-06

நைரோபி, கென்யாவின் நெய்ரி மாகாணத்தில் பள்ளி விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 17 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

கென்யா நாட்டில் உள்ள நெய்ரி மாகாணத்தில் ஹில்சைட் எண்டர்சா என்ற பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இந்தப் பள்ளிக்கூடத்தில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இங்குள்ள மாணவர் விடுதியில் பல மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாணவர்கள் தங்கும் விடுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 17 மாணவர்கள் தீயில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 13 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விடுதியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். காயமடைந்த மாணவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து