முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீ வாணி அறக்கட்டளைக்கு தினமும் 1,500 தரிசன டிக்கெட் வழங்கப்படும் : திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2024      ஆன்மிகம்
Tirupati 2023 03 30

Source: provided

திருமலை : ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு தினமும் 1500 தரிசன டிக்கெட் மட்டுமே தினமும் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு தலா ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு 500 ரூபாய் மதிப்பு கொண்ட வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட் ஒன்றை தேவஸ்தான நிர்வாகம் வழங்கி வருகிறது.

இந்த டிக்கெட்டுகள் ஆன்லைனில் நாள் ஒன்றுக்கு 500 என்ற அடிப்படையிலும், கவுன்டர்களில் அங்கு வந்து கேட்கும் அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர திருப்பதி விமான நிலையத்தில் ஒவ்வொரு நாளும் 100 டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசனத்தின் அடிப்படையில் தினமும் 2,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலா 10,500 ரூபாய் செலுத்தி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். திருப்பதி மலையில் உள்ள கவுன்டர்களில் கட்டுப்பாடு இல் லாமல் டிக்கட்டுகள் வழங்கப்படுவதால் ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் வாங்கிய பக்தர்களுக்கான தரிசன நேரம் வெகுவாக அதிகரித்தது. 

அதன் தாக்கம் சாதாரண பக்தர்கள் தரிசன நேரத்தை பாதிப்படைய செய்கிறது. எனவே இந்த மாதம் 22-ம் தேதி முதல் தினமும் திருப்பதி மலையில் உள்ள கவுன்டர்களில் 900 டிக்கெட்டுகளும், திருப்பதி விமான நிலையத்தில் உள்ள கவுண்டரில் 100 டிக்கெட்டும், ஆன்லைனில் 500 டிக்கெட்டுகளும் என மொத்தம் 1,500 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் மட்டுமே தினமும் வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து