முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான விசாரணை ஐகோர்ட்டில் தள்ளிவைப்பு

திங்கட்கிழமை, 22 ஜூலை 2024      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

சென்னை : முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளை ஜூலை 25-க்கு தள்ளி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில், கடந்த 2017-ம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்றதாக அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக சட்டப்பேரவை உரிமைக்குழு, உரிமை மீறல் நோட்டீசை அனுப்பியது.

இந்த நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளதாகக்கூறி, அதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் உரிமை மீறல் இருப்பதாக கருதினால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவு பிறப்பித்திருந்தது. அதையடுத்து, உரிமைக்குழு, தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இரண்டாவது நோட்டீசையும் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில், சட்டப்பேரவை செயலாளர் மற்றும் உரிமைக்குழு சார்பில் மேல்முறையீட்டு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி. குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்த தி.மு.க. எம்.எல்.ஏ-க்களுக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை என நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து சம்பந்தப்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூலை 25-க்கு தள்ளி வைத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து