முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் 9 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து

திங்கட்கிழமை, 22 ஜூலை 2024      தமிழகம்
Engg 2023-07-13

Source: provided

சென்னை : தமிழ்நாட்டில் 2024-25-ம் கல்வியாண்டில் 9 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் 450-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 2 லட்சம் இடங்கள் உள்ளன. இவை ஒற்றைச்சாளர முறையில் இணையவழி பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.

பொறியியல் கல்லூரிகளில் இந்த கல்வியாண்டில் (2024–2025) அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்காக 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 மாணவா்கள் இணைய வழியில் விண்ணப்பித்தனர். அவா்களில் 1 லட்சத்து 99 ஆயிரத்து 868 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதையடுத்து அவா்களுக்கான தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் ஆணையா் ஜூலை 10ஆம் தேதி வெளியிட்டார். இதில், 65 மாணவ, மாணவிகள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றனா்.  பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கி வரும் செப்டம்பர் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. 

இந்நிலையில், தமிழ்நாட்டில் 2024-25 ஆம் கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகள் சில மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது போதுமான மாணவர் சேர்க்கை இல்லாதது, உட் கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 9 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகிறது.  

அதன்படி, தமிழ்நாட்டில் 2023 -24ம் கல்வி ஆண்டில் 442 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டன. 2024- 25 கல்வி ஆண்டில் 433 கல்லூரிகள் மட்டுமே மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 11 கல்லூரிகள் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து