முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு

சனிக்கிழமை, 21 டிசம்பர் 2024      உலகம்
Ukraine 2024 11 20

Source: provided

மாஸ்கோ: ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.

உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இதில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்ய ராணுவம் தீவிரப்படுத்தி வரும் நிலையில், மேற்கத்திய நாடுகளின் ஆயுத மற்றும் பொருளாதார உதவியுடன் ரஷ்யாவின் தாக்குதல்களை உக்ரைன் ராணுவம் எதிர்கொண்டு போரிட்டு வருகிறது.

இந்நிலையில், ரஷ்யாவின் ரில்ஸ்க் நகரில் நேற்று உக்ரைன் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர் என்று குர்ஷ்க் மாகாணத்தின் பொறுப்பு கவர்னர் அலெக்சாண்டர் கின்ஷ்டைன் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குழந்தைகள் இறக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 6 பேர் கொல்லப்பட்டதாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது புதுப்பிக்கப்பட்ட சரியான தரவுகள் வெளியாகியுள்ளது. அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகளை கொண்டு உக்ரைன் இந்த தாக்குதலை நடத்தியதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து