முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்டோபர் 3-வது வாரத்தில் நடக்கிறது த.வெ.க. மாநாடு

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2024      தமிழகம்
Vijay-4 2023 06 17

சென்னை, தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டின் தேதி மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 3-வது வாரத்தில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் செப்.23-ஆம் தேதி கட்சியின் முதல் மாநாடு நடைபெறவுள்ளதாகவும், மாநாடு நடைபெறும் தேதியை விஜய் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்றும் முன்னதாக தகவல் வெளியானது.

இதனிடையே தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் அதன் தலைவர் விஜய் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தியிருந்தார். சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநாடு தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், த.வெ.க. மாநாட்டை நடத்துவதற்கான கால அவகாசம் குறைவாக இருப்பதால், அக்டோபர் மூன்றாவது வாரத்தில் மாநாட்டை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து