முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி முதல்வராக இன்று பதவியேற்கிறார் அதிஷி

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2024      இந்தியா
Adishi 2024-02-04

Source: provided

புதுடெல்லி : டெல்லி மாநில முதல்வராக இன்று அதிஷி பதவியேற்று கொள்கிறார். பதவியேற்புக்கு பிறகு வரும் 26 மற்றும் 27-ம் தேதிகளில் சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெறும். அதில் தனது ஆட்சி பெரும்பான்மையை அதிஷி நிரூபிப்பார். 

டெல்லி மாநில முதல்வராக  இருந்த அரவிந்த்கெஜ்ரிவால், ராஜினாமா செய்ததால் புதிய முதல்வராக பெண் அமைச்சர் அதிஷியை ஆம் ஆத்மி கட்சியினர் தேர்வு செய்தனர். புதிய அமைச்சரவையில் ஏற்கனவே உள்ள அமைச்சர்கள் சவுரப் பரத்வாஜ், கைலாஷ் கெலாட், கோபால்ராய், இம்ரான் உசைன் ஆகியோர் நீட்டிக்கப்படுவார்கள் என்றும், இவர்கள் தவிர 2 புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. புதியவர்களில் ஒருவர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருப்பார் என தெரிகிறது. 

டெல்லி சட்டசபையில் மொத்தம் 70 உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் முதல்வர் உள்பட அதிகபட்சம் 7 அமைச்சர்கள் முழு பலத்துடன் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய முதல்வர் தொடர்பான கோப்புகளை கவர்னர் வி.கே.சக்சேனா கடந்த 18-ம் தேதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார். 

இன்று சனிக்கிழமை பதவியேற்பு விழாவை நடத்த ஆம் ஆத்மி முன்மொழிந்துள்ளது. ஜனாதிபதிக்கு கவர்னர் மூலம் அது பரிந்துரைக்கப்பட்டது. இதன்படி இன்று பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. பதவியேற்புக்கு பிறகு வரும் 26 மற்றும் 27-ம் தேதிகளில் சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெறும். அதில் தனது ஆட்சி பெரும்பான்மையை அதிஷி நிரூபிப்பார். 70 பேர் கொண்ட டெல்லி சட்டசபையில் 61 இடங்களை ஆம் ஆத்மி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து