முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் விபத்தில் காயமடைந்த அரியானா இளைஞரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய ராகுல் காந்தி

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2024      இந்தியா
Rahul 2024-03-20

Source: provided

சண்டிகர் : அமெரிக்காவில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த அரியானா இளைஞரின் கோக்ரிபூர் கிராமத்திற்கு சென்று அவரது  குடும்பத்தினரை நேற்று நேரில் சந்தித்து  ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். 

ராகுல் காந்தி சமீபத்தில் அமெரிக்க பயணம் மேற்கொண்டார். அப்போது அங்கு காயமடைந்த அரியானாவை சேர்ந்த இளைஞர் அமித்தை சந்தித்தார். காயமடைந்த அமித்திடம் அவரது குடும்பத்தினரை நேரில் சந்திப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று அரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் உள்ள கோக்ரிபூர் கிராமத்திற்கு சென்று அமித்தின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். 

ராகுல் காந்தியின் வருகை குறித்து எந்தவித முன்னறிவிப்பும் இல்லை என்றும், அவர் கோக்ரிபூர் கிராமத்தை அடைந்த பிறகுதான் தங்களுக்கு தகவல் தெரியவந்ததாக கர்னாலில் உள்ள உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். 

அரியானாவில் சட்டசபை தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில், ராகுல் காந்தியின் திடீர் வருகை அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாகியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து