முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் 4 நாட்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2024      ஆன்மிகம்
Tirupati-laddu 2024-08-30

Source: provided

திருப்பதி : திருப்பதியில் 4 நாட்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலில் ஒரு நாளில் சுமார் 3 லட்சம் லட்டுகள் விற்பனையாகி வந்தன. திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அதிகளவில் லட்டுகளை வாங்கிச்செல்வது வழக்கம். இந்த நிலையில் திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்படுவதாக சர்ச்சை எழுந்த விவகாரம் ஆந்திரம் மற்றுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து பக்தர்களிடேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில் உள்நோக்கம் இருக்கிறது என்று கூறப்பட்ட நிலையில் இந்தச் சம்பவம் லட்டு விற்பனையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. மேலும், தினமும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவருவதாகவும் கோயில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், “கடந்த நான்கு நாட்களில் மட்டும் திருப்பதியில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, செப்டம்பர் 19 ஆம் தேதி மட்டும் 3.59 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 20 ஆம் தேதி 3.67 லட்சம் லட்டுகளும், செப்டம்பர் 21 ஆம் தேதி 3.60 லட்சம் லட்டுகளும், செப்டம்பர் 22 ஆம் தேதி 3.60 லட்சம் லட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன” என்றனர்.

ஆனால், வழக்கமாக தினமும் 3.50 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுவந்தது. இப்போது அதைவிட 3 லட்சத்துக்கும் அதிகமாக லட்டுகள் தயாரிக்கப்பட்டுவருகிறது. லட்டு தயாரிப்பில் கடலைப்பருப்பு, பசு நெய், சர்க்கரை, முந்திரி, பாதாம், உலர் திராட்சை கொண்டு தயாரிக்கப்படுகிறது. மேலும், லட்டு தயாரிப்பில் தினமும் 15,000 கிலோ அளவிலான பசு நெய் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து