முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கடந்து வந்த பாதை

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2024      தமிழகம்
Udayanidhi-2023-11-15

Source: provided

சென்னை : 1977-ம் ஆண்டு நவம்பர் மாதம் 27-ம் தேதி பிறந்த உதயநிதி ஸ்டாலின், சென்னை லயோலா கல்லூரியில் பி.காம். படித்துள்ளார். இவருக்கு கிருத்திகா என்ற மனைவியும், இன்பன், தன்மயா பிள்ளைகளும் உள்ளனர்.

விஜய், திரிஷா நடித்த குருவி திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாகும். உதயநிதி ஸ்டாலினை விநியோகஸ்தராக கொண்டு வெளிவந்த முதல் திரைப்படம் கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா.

இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக மதராச பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், மைனா, கோ, டான், விக்ரம் ஆகிய படங்களை வெளியிட்டார்.  திரையில், 2009-ம் ஆண்டு வெளியான ஆதவன் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். 

அதை தொடர்ந்து 2012-ம் ஆண்டு ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகினார். அப்படம் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா, கெத்து, மனிதன், சரவணன் இருக்க பயமேன், பொதுவாக எம்மனசு தங்கம்,  நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

திரைப்படங்களில் ஆர்வமாக நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின், 2018 மார்ச் முதல் தீவிர அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார். 2019-ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும், தமிழகச் சட்டசபையின் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களிலும் தி.மு.க.விற்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். 

2019-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து, 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில்  தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

பின்னர் 2022 டிசம்பர் மாதம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். திரைத்துறையிலும், அரசியலிலும் தீவிரமாக பணியாற்றி வந்த உதயநிதி ஸ்டாலின்,  2023-ம் ஆண்டு வெளிவந்த மாமன்னன் படத்துடன் தன்னுடைய திரையுலகை பயணத்தை முடித்துக் கொண்டு தீவிர அரசியலில் பணியாற்றி வருகிறார்.  

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தை மேற்கொண்டார். இந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அரசியலில் உச்சத்துக்கே சென்றார் உதயநிதி ஸ்டாலின்.

இதனை தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக்க  வேண்டும் என்ற கோரிக்கை தி.மு.க.வில் வலுக்க ஆரம்பித்தது. தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், அமைச்சர்களும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.  

இந்நிலையில், அமைச்சரவை மாற்றம் மற்றும் புதிய அமைச்சர்கள் குறித்த முதல்வரின் பரிந்துரை கடிதம், கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து அமைச்சரவை மாற்றத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி  ஒப்புதல் அளித்தார். இது தொடர்பாக கவர்னர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. 

அதில் முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதி, 2009-ம் ஆண்டு தனது மகன் மு.க.ஸ்டாலினை துணை முதல்வராக அறிவித்தார். அதே வழியில் உதயநிதி ஸ்டாலினும் தமிழக துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து