முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளிக்கு பிறகு மகராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல்

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2024      இந்தியா
Eknath-Shinde 2023-12-03

Source: provided

புதுடெல்லி : மகராஷ்டிரத்தில் பண்டிகை காலமான தீபாவளிக்கு பிறகு, சட்டப்பேரவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

மகராஷ்டிரத்தில் நவம்பர் 26-ம் தேதியுடன் தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து, அதற்குள்ளாக மகராஷ்டிரத்தில் சட்டப்பேரவை தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இது குறித்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கூறியதாவது,

பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, மார்க்சிய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், எம்என்எஸ், சமாஜவாதி, சிவசேனை உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை சந்தித்தோம். மாவட்ட நீதிபதி, காவல் ஆணையர், காவல்துறை தலைமை இயக்குநர் முதலான அதிகாரிகளையும் சந்தித்தோம்.

தசரா, தீபாவளி முதலான பண்டிகை காலத்தை நினைவில் கொண்டு, தேர்தல் தேதியை பரிசீலிக்குமாறு அரசியல் கட்சிகள் எங்களிடம் கேட்டுக்கொண்டன.  மேலும், நகர்ப்புற மற்றும் இளம் வாக்காளர்களின் தேர்தல் குறித்த அக்கறையின்மையையும் கருத்தில் கொண்டு, வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகபட்ச வாக்குப்பதிவை உறுதி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தெற்கு மும்பையில் உள்ள கோலாபா, புனே கன்டோன்மென்ட், மும்பாதேவி, குர்லா, கல்யாண் முதலான பகுதிகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மிகக்குறைந்த அளவிலேயே வாக்களித்தனர்.  

அதுமட்டுமின்றி, வாக்குப்பதிவை அதிகரிக்க தினசரி ஊதியம் பெறுவோர் மற்றும் அமைப்புசாரா துறையில் உள்ளவர்களுக்கு வாக்களிக்கும் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக இருக்கும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து