முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்மேற்கு பருவமழை இயல்பைவிட தமிழகத்தில் 18 சதவீதம் கூடுதல் பொழிவு

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2024      தமிழகம்
Weather-Center 1

சென்னை, தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட இந்தாண்டு 18 சதவீதம் கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் வரை பெய்யும். தென்மேற்கு பருவ மழையின் மூலம் தமிழகத்தின் கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் மழை பொழிவை பெறுகின்றன. இந்த நிலையில் நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை பெய்துவருகின்றன. கேரளத்தில் மட்டுமின்றி தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை பரவலாகப் பெய்து வருகின்றது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது.,  தமிழகத்தில் ஜூன் 1 முதல் செப்.30 வரை தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழையின் அளவு 389.3 மி.மீ ஆகும். இயல்பாக 328.5 மி.மீ வரை மழைப் பதிவாகும். இந்தாண்டு பெய்த மழையின் அளவு 39 செ.மீ அதாவது இயல்பை விட 18 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்தவகையில் நெல்லையில் 92.5 இயல்பு மழையை விட அதிகபட்சமாக 265 சதவீதம் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக நாகையில் இயல்பு மழை 246.6 மி.மீட்டரிலிருந்து 50 சதவீதம் குறைவாகப் பதிவாகியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து