முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் சிவாஜி கணேசன் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2024      சினிமா      தமிழகம்
CM-1 2024-10-01

சென்னை, நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாளையொட்டி நேற்று அவரது சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலையணிவித்து  மரியாதை செலுத்தினார். 

நடிகர் சிவாஜி கணேசனின் 97-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சிவாஜி கணேசனின் சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.   

இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் முதல்வர் மு.க ஸ்டாலின், சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள சிவாஜி கணேசனின் சிலைக்கு முதல்வருடன்  அமைச்சர்கள் இணைந்து மரியாதை செலுத்தினர். அவர்களுடன் நடிகர் பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்ட சிவாஜி கணேசனின் குடும்பத்தினர் உடனிருந்தனர்.

கடந்த 2001-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சிவாஜி கணேசன் மறைந்தார். சிவாஜி கணேசனின் உடல் மறைந்தாலும் அவரது நடிப்பு தமிழ் சினிமா உள்ளவரை இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நடிகர் சிவாஜி கணேசன் கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷன், உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார் என்பதும் அவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் தேசிய  விருது பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.      

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து