முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரில் ஓடும் பஸ்ஸில் கண்டக்டரை கத்தியால் குத்தியவர் கைது

புதன்கிழமை, 2 அக்டோபர் 2024      இந்தியா
Bangalore-Bus-2024-10-02

கர்நாடகா, கண்டக்டருக்குபடிக்கட்டில் நிற்க வேண்டாம் என்று அறிவுரை வழங்கிய பஸ் கண்டக்டரை பயணி கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலம் பெங்களூரில்  அரசு பஸ்ஸில் ஏறிய ஹர்ஷ் சின்ஹா என்ற 25 வயது இளைஞர் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்துள்ளார். இதனைக் கவனித்த பஸ் கண்டக்டர் யோகேஷ் படிக்கட்டில் நிற்காமல் உள் வரும்படி அறிவுறுத்தியுள்ளார்.

ஆனால் கண்டக்டர் சொல்வதைக் கேட்காமல் அவருடன் இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தான் வைத்திருந்த கத்தியை உருவி கண்டக்டர் யோகேஷின் அடிவயிற்றில் குத்தியுள்ளார். மேலும் பஸ்சில் பயணித்த மற்ற பயணிகளையும் அவர் கத்தியால் தாக்க முற்பட்டுள்ளார். கத்தியைக் காட்டி மிரட்டி அனைவரையும் பஸ்சில் இருந்து இறங்க வைத்துவிட்டு அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார்.

பஸ் ஓட்டுநர் சம்யோஜித்தாக பஸ்சின் ஆட்டோமேட்டிக் கதவை லாக் செய்துவிட்டு வெளியே குதித்த பின்னர் உள்ளே மாட்டிக்கொண்ட அந்த இளைஞர் கோடரியால் பஸ்சை சேதப்படுத்தியுள்ளார். ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள வைதேகி சர்க்கிள் என்ற இடத்தில் நேற்று  இரவு 7 மணி அளவில் இந்த சம்பவம் நடந்த நிலையில் உடனே அங்கு விரைந்த போலீசார் அந்த இளைஞரை கைது செய்தனர்.

மேலும் கத்தியால் தாக்கப்பட்ட கண்டக்டர் ரத்தம் ஒழுகிய நிலையில் அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீஸ் விசாரணையில் இளைஞர் ஹர்ஸ் சின்ஹா ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் பெங்களூரில் கால் சென்டரில் வேலை பார்ப்பவர் என்பதும் தெரியவந்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து