முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் மீண்டும் பரபரப்பு: தங்கும் விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதன்கிழமை, 2 அக்டோபர் 2024      தமிழகம்
Bom

மதுரை, மதுரையில் உள்ள 4 தங்கும் விடுதிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்துள்ளது. 

நாடுமுழுவதும் சமீப நாட்களாக ரெயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மதுரையில் உள்ள 4 தங்கும் விடுதிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட தங்கும் விடுதிகளில் விரைந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் வளாகம் முழுவதும் தீவிர சோதனையிட்டனர். சோதனையில் எந்த பொருளும் சிக்காததை அடுத்து வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக கடந்த 2 நாட்களுக்கு முன் 8 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இதுபோன்ற சம்பவத்தால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து