முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை - மதுரை பயணம்: ரெயிலின் படிக்கட்டில் அமர்ந்து பயணித்தவர் தவறி விழுந்து பலி

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2024      தமிழகம்
Train-Accident

Source: provided

சென்னை: சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்ற ரெயிலின் படிக்கட்டில் அமர்ந்து பயணித்த இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக சென்னையிலிருந்து, மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் எழும்பூரில் இருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த ரெயிலில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்த பாலமுருகன் என்ற இளைஞர் பயணித்தார். அவர் ரெயிலின் படிக்கட்டில் அமர்ந்து காலை நீட்டியவாறு பயணித்துள்ளார்.

இந்த நிலையில் ரெயில், சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தை கடந்தபோது, அவரது கால்கள் நடைமேடையில் உரசியது. இதையடுத்து ரெயிலில் இருந்து தவறி விழுந்த அவர் சுமார் 150 மீட்டர் தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டு, பின்னர் ரெயிலின் அடியில் சிக்கி உயிரிழந்தார். ரெயிலில் இருந்து பாலமுருகன் தவறி விழுந்த பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து