முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 வாலிபர்கள் வெறிச்செயல்:டெல்லியில் டாக்டர் சுட்டுக்கொலை

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2024      இந்தியா
Gun 2023 04 17

Source: provided

புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் ஜெய்த்பூர் பகுதியில் மருத்துவமனையில் பணியில் இருந்த ஜாவித் அக்தர் என்ற டாக்டர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். சிகிச்சைக்கு வந்த வாலிபர்கள் வெறிச்செயலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் ஜெய்த்பூர் பகுதியில் நிமா மருத்துவமனையில் டாக்டர் ஜாவித் அக்தர் பணியில் இருந்தார். சிகிச்சைக்காக வந்த இருவர் டாக்டர்களை சந்திக்க அனுமதி கோரினர். அனுமதி கிடைத்ததும் உள்ளே சென்ற வாலிபர்கள், அங்கிருந்த டாக்டர் ஜாவித்தை சுட்டுக்கொலை செய்தனர். இந்த சம்பவம் அங்கிருந்து அனைவரையும் கடும் அதிர்ச்சி அடையச் செய்தது. வாலிபர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

டெல்லி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் இருந்த சி.சி.டி.வி., காட்சிகளை போலீசார் கைப்பற்றி, விசாரணையை துவக்கினர். சமீபத்தில், கோல்கட்டாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி டாக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதி கேட்டு டாக்டர்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். இந்த சூழலில், தலைநகர் டெல்லியில் டாக்டர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து