முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி: ஒரேநாளில் 18.5 டன் குப்பைகள் அகற்றம்

திங்கட்கிழமை, 7 அக்டோபர் 2024      தமிழகம்
Marina 2024-10-06

Source: provided

சென்னை : மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி நடந்த நாளில் 18.5 டன் குப்பைகள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் விமானங்களின் பிரமாண்ட சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. வானில் போர் விமானங்கள் நிகழ்த்திய வர்ணஜாலத்தை லட்சக்கணக்கான மக்கள் வியப்புடன் கண்டுகளித்தனர். இந்த சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு, 6 ஆயிரத்து 500 போலீசார் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்ற மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 18.5 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அகற்றப்பட்ட குப்பைகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மட்டும் 4 டன் இருந்துள்ளது.

30-க்கும் மேற்பட்ட குப்பை அள்ளும் வாகனங்கள் மண்ணில் புதையுண்டு இருக்கும் சிறு குப்பைகளை அகற்ற பயன்படுத்தப்பட்டன. 128 தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். குப்பைகள் அகற்றப்பட்டு கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு கடற்கரை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து