முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை அணயின் தலைமை பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா நியமனம்

திங்கட்கிழமை, 7 அக்டோபர் 2024      விளையாட்டு
Sanath-Jayasuriya 2024-10-0

Source: provided

கொழும்பு : 2026 டி20 உலகக் கோப்பை வரை சனத் ஜெயசூர்யா பயிற்சியாளராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக நியமனம்...

இலங்கை கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பைக்கு பின்னர் தலைமை பயிற்சியாளர் இல்லாமல் விளையாடி வந்தது. இதனால் தற்காலிக தலைமை பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரரான சனத் ஜெயசூர்யா கடந்த ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார். இவரது பயிற்சியின் கீழ் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் இலங்கை சிறப்பாக செயல்பட்டது. இவரது பயிற்சியின் கீழ் இலங்கை அணி 27 ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியது. தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

புதிய பயிற்சியாளராக...

இந்நிலையில், சனத் ஜெயசூர்யாவை இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அக்டோபர் 13-ந் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடரில் இருந்து ஜெயசூர்யா புதிய பயிற்சியாளராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 டி20 உலகக் கோப்பை வரை இவர் பயிற்சியாளராக செயல்படுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து