முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்காளத்தில் பயங்கரம்: நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

திங்கட்கிழமை, 7 அக்டோபர் 2024      இந்தியா
West-Bengal 2024-10-07

Source: provided

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், பிர்பூம் மாவட்டத்தில் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் சுரங்கத் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை 10.30 மணியளவில் சுரங்கத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். பலர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெடிவிபத்தில் பலர் சிக்கியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்து அடையாளம் காணமுடியாத அளவில் உடல்கள் சிதறிபோனதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இதுவரை நாங்கள் 7 பேர் உடல்களை மீட்டுள்ளோம். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது என்றார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து