முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியானா சட்டசபை தேர்தல்: மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி: பஜ்ரங் புனியா வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 8 அக்டோபர் 2024      விளையாட்டு
Vinesh-Bhogat-2024-09-07

Source: provided

சண்டிகார் : அரியானா சட்டசபை தேர்தலில் மல்யுத்த வீராங்கனையும், ஜுலானா தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான வினேஷ் போகத் 65,080 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அரியானாவில் கடந்த 5-ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் நடந்த இந்த ஒரே கட்ட தேர்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று எண்ணப்பட்டன. 

 இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.  இந்நிலையில், அரியானா சட்டசபை தேர்தலில் மல்யுத்த வீராங்கனையும், ஜுலானா தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான வினேஷ் போகத் 65,080 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 

இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஷ் குமார் 59,065 வாக்குகள் பெற்று 2-ம் இடத்தை பெற்றுள்ளார். யோகேஷ் குமாரை 6,015 வாக்குகள் வித்தியாசத்தில் வினேஷ் போகத் வீழ்த்தியுள்ளார்.

19 ஆண்டுகளுக்கு பின்பு ஜுலானா தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதை முன்னிட்டு காங்கிரஸ் உறுப்பினர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை பகிர்ந்தும் கொண்டாடி வருகின்றனர். 

முன்னதாக, பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிக்கு முன்னேறி வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்திருந்தார் வினேஷ் போகத். இறுதிப் போட்டிக்கு முன்னதாக அவரது உடல் எடை 100 கிராம் அதிகம் இருந்த காரணத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 

அப்போது தேசமே அவருக்கு ஆதரவாக நின்றது. இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியில் அவர் இணைந்தார். அவருக்கு அரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை காங்கிரஸ் வழங்கியது.

தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வினேஷ் போகத்திற்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், 

இந்தியாவின் மகளான வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள். இந்தப் போட்டி ஒரு ஜூலானா தொகுதிக்காக மட்டும் அல்ல, கட்சிகளுக்கு இடையேயான சண்டை மட்டுமல்ல. 

இந்த போராட்டம் நாட்டின் பலமான அடக்குமுறை சக்திகளுக்கு எதிரானது. இதில் வினேஷ் வெற்றி பெற்றுள்ளார் என்று  பஜ்ரங் புனியா அந்த பதிவில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து