முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெய்ஸ்வாலுக்கு லாரா புகழாரம்

புதன்கிழமை, 9 அக்டோபர் 2024      விளையாட்டு
Jaiswal 2024-02-17

Source: provided

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், இந்திய இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு எந்த சூழலிலும் சிறப்பாக விளையாடக்கூடிய திறமை இருக்கிறது என வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரையன் லாரா கூறியுள்ளார். இது தொடர்பாக மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரையன் லாரா கூறியதாவது, இந்திய இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு எந்த சூழலிலும் சிறப்பாக விளையாடக்கூடிய திறமை இருக்கிறது. 

வெஸ்ட் இண்டீசில் அவர் பேட்டிங் செய்த விதத்தை பார்த்திருக்கிறேன். அதே சமயம் ஆஸ்திரேலியாவில் உள்ள ஆடுகளங்கள் கொஞ்சம் வித்தியாசமானது. ஆனால் உங்களது பலத்தை நம்பி விளையாடினால், எந்த சூழலிலும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். மனரீதியாக சில விஷயங்களை மாற்றிக் கொண்டால் ஆஸ்திரேலிய மண்ணில் சாதிக்கலாம் என கூறினார். இந்திய அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சென்று 5 டெஸ்டில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

______________________________________________________________________

ஜோ ரூட்டுக்கு பாராட்டு

ஜோ ரூட் இங்கிலாந்துக்காக அதிக டெஸ்ட் ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ளார். இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பகிர்ந்த விடியோவில் பென் ஸ்டோக்ஸ் பேசியதாவது: சில நேரங்களில் 50 ரன்களை 100ஆக மாற்றுவதால் மட்டும் அணி வெற்றி பெறுவதில்லை. ஆனால், ஜோ ரூட்டின் தன்னலமற்ற தன்மைதான் அணிக்கு பல வெற்றிகளை கொடுத்துள்ளது. இது அவரது நம்பமுடியாத இயல்புத் தன்மையைக் காட்டுகிறது.

ஜோ ரூட் எப்போதும் அணியை மட்டுமே முன்னிலைப்படுத்தி விளையாடுகிறார். இருந்தும் அவர் இவ்வளவு ரன்கள் அடித்திருப்பது எங்களுக்கு கூடுதல் போனஸ்தான். ஜோ ரூட் நம்பமுடியாத ஒரு வீரர்.  இந்த சாதனையை ஒருவர் இங்கிலாந்தில் முறியடிக்க மிக நீண்ட நீண்ட காலங்கள் தேவைப்படும். இதை நிகழ்த்துவது மிகவும் கடினமானது என்றார். 33 வயதாகும் ஜோ ரூட் சச்சின் சாதனையை முறியடிப்பாரா என இங்கிலாந்து ரசிகர்களும் இந்திய ரசிகர்களும் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து