முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியானா தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்: ராகுல்

புதன்கிழமை, 9 அக்டோபர் 2024      இந்தியா
Rahul-Gandhi-2024-08-22

Source: provided

புதுடெல்லி : அரியானா தேர்தலில் கிடைத்த எதிர்பாராத முடிவுகளை ஆய்வு செய்து வருகிறோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

நடந்து முடிந்த ஜம்மு காஷ்மீர் மற்றும் அரியானா மாநில சட்டசபை தேர்தல்  முடிவுகள்  வெளியானதில் காஷ்மீரை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. அரியானாவில் பா.ஜ.க. 3-வது முறையாக தொடர் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது.  

இந்த நிலையில், இருமாநில தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

அரியானா தேர்தலில் கிடைத்த எதிர்பாராத முடிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். பல தொகுதிகளில் இருந்து வந்த புகார்கள் குறித்து தேர்தல் கமிஷனிடம் புகார் அளிக்க உள்ளேன். ஆதரவு அளித்த அரியானா மக்களுக்கும், அயராது உழைத்த எங்கள் தொண்டர்களுக்கும் மனமார்ந்த நன்றி. 

ஜம்மு ஜாஷ்மீரில் இண்டியா கூட்டணிக்கு வெற்றியளித்த அம்மாநில மக்களுக்கு இதயப்பூர்வமான நன்றி. ஜனநாயக சுயமரியாதைக்கும், அரசியல் சாசனத்திற்கும் கிடைத்த வெற்றி இது. உரிமைகள், பொருளாதார நீதி மற்றும் உண்மைக்கான இந்த போராட்டத்தை நாங்கள் தொடர்வோம். மக்களின் குரலுக்கு எப்போதும் ஆதரவாக நிற்போம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து