முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்கொரியாவுக்கு மீண்டும் குப்பை பலூன்களை அனுப்பிய வடகொரியா

வியாழக்கிழமை, 24 அக்டோபர் 2024      உலகம்
South-Korea-2024-10-24

சியோல், குப்பை நிரம்பிய பலூன்களை தென்கொரியாவிற்கு வடகொரியா அனுப்பி உள்ளது. இந்த குப்பை பலூன்கள், தென்கொரியாவின் தலைநகர் சியோலில் உள்ள அதிபர் மாளிகை  வளாகத்திற்குள் விழுந்துள்ளது.

வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் பல வருடங்களாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.  இதனால், தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமாக அவ்வப்போது ஏவுகணை சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. வடகொரியாவின் அச்சுறுத்தலை அமெரிக்காவுடன் இணைந்து சமாளித்து வரும்  தென்கொரியா, அந்நாட்டிற்கு தக்க பதிலடியும் கொடுத்து வருகிறது.  இதனால், கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவி வருகிறது. 

இந்த நிலையில்,  கடந்த 9-ம் தேதியன்று இரவில் 300-க்கும் அதிகமான பலூன்களில் குப்பைகள் அடங்கிய பைகளை தொங்க விட்டு, அவற்றை தென் கொரிய எல்லைக்குள் வடகொரியா பறக்க விட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடைபெற்று ஒரு சில வாரங்களில் மீண்டும்  குப்பை நிரப்பிய பலூன்களை  நேற்று முன்தினம் வடகொரியா அனுப்பியுள்ளது. 

வடகொரியாவின் இந்த குப்பை பலூன்கள், தென்கொரியாவின் தலைநகர் சியோலில் உள்ள அதிபர் மாளிகை  வளாகத்திற்குள் விழுந்துள்ளது. உடனடியாக அந்த பலூன்களை பாதுகாப்புக்கு இருந்த ஊழியர்கள் கைப்பற்றினர். இந்த பலூன்களுக்குள் ஆபத்தான எதுவும் இல்லை எனவும் தென்கொரிய பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து