முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷேக் ஹசீனா கட்சியின் மாணவர் பிரிவுக்கு தடை: வங்கதேச இடைக்கால அரசு உத்தரவு

வியாழக்கிழமை, 24 அக்டோபர் 2024      உலகம்
Sheikh-Hasina-2024-10-24

டாக்கா, ஷேக் ஹசீனா கட்சியான அவாமி லீக்கின் மாணவர் பிரிவுக்கு வங்கதேசத்தின் இடைக்கால அரசு தடைவிதித்துள்ளது.

வங்கதேச பிரதமராக இருந்தவர் ஷேக் ஹசீனா. இவருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனால் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. 

இடைக்கால அரசு அமைந்ததும் ஷேக் ஹசீனாவுக்கு எதிராகவும், அவரது கட்சிக்கு எதிராகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. ஷேக் ஹசீனா மற்றும் அவரது கட்சியை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஷேக் ஹசீனா கட்சியின் மாணவர் பிரிவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை தாக்குதலில் மாணவர் பிரிவு ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இடைக்கால அரசு தெரிவித்தள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து