முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சத்யபிரத சாகு ஆலோசனை

வியாழக்கிழமை, 24 அக்டோபர் 2024      தமிழகம்
Satyaprata-Saku

சென்னை, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினார். 

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் போன்றவற்றுக்கான பணிகள் வரும் 29-ம் தேதி தொடங்குகிறது. அன்று காலை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இப்பட்டியல் அடிப்படையில், திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 

வரும் 28-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வதற்கு விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறுவதையொட்டி தலைமைச் செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் பங்கேற்க அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி கட்சி, பி.ஏ. சங்மாவின் தேசிய மக்கள் கட்சி ஆகியவை மற்றும் மாநில கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க., தே.மு.தி.க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

 அதன்படி இக்கூட்டத்தில் ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் 2 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் நடைமுறைகள், சிறப்பு முகாம் ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து