முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தானில் கார் கவிழ்ந்து விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

வியாழக்கிழமை, 24 அக்டோபர் 2024      இந்தியா
Rajasthan 2024-10-24

ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் டயர் வெடித்து கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த கார் சிரோஹி மாவட்டத்தில் உள்ள பிர்வார் - பிண்ட்வாரா நெடுஞ்சாலையில் சென்ற போது டயர் வெடித்ததில் கார் சாலையில் கவிழ்ந்தது.

இந்த  விபத்தில் காரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் அந்த கார் அதிவேகத்தில் சென்ற போது டயர் வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து