முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரியங்கா காந்தியின் சொத்து மதிப்பு ரூ.12 கோடி: வேட்புமனுவில் தகவல்

வியாழக்கிழமை, 24 அக்டோபர் 2024      இந்தியா
Priyanka 2024-10-24

திருவனந்தபுரம், வயநாடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா காந்தி தனது வேட்பு மனுவில் மொத்தம் சுமார் ரூ. 12 கோடிக்கு சொத்துகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.  

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி 2 தொகுதிகளில் போட்டியிட்டார். கேரளா மாநிலம் வயநாடு மற்றும்   உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த 2 தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இதையடுத்து வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.  

இதையடுத்து வயநாடு மக்களவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே  மராட்டியம் மற்றும் ஜார்கண்ட் சட்டசபை தேர்தலோடு வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி வயநாடு மக்களவை இடைத்தேர்தல் நவம்பர் 13-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியின் தங்கை பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக கட்சி தலைமை அறிவித்தது. அதை தொடர்ந்து பிரியங்கா காந்தி நேற்று முன்தினம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.  பிரியங்கா காந்தியுடன் தாய் சோனியா காந்தி,  ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட பல காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உடன் இருந்தனர்.

இந்நிலையில் பிரியங்கா காந்தியின் சொத்து மதிப்பு குறித்த விபரம் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் இணைக்கப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 

பிரியங்கா காந்தியின் கையில் ரூ. 52 ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளது. 30.09.2024-ம் தேதியின் படி பிரியங்கா காந்தியின் டெல்லி எச்.டி.எப்.சி வங்கி கணக்கில் ரூ.2.80 லட்சம் பணம் உள்ளது. டெல்லி யு.சி.ஓ. வங்கியில் ரூ. 80,399 ரொக்கப்பபணம் இருக்கிறது. அதே போல் கேரளா கனரா வங்கியில் ரூ.5,929 சேமிப்பாக இருக்கிறது. மியூச்சுவல் பண்ட் முறையில் ரூ.2.24 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. 

சொந்தமாக ஹோண்டா சி.ஆர்.வி. கார் உள்ளது. இந்த காரை அவரது கணவர் ராபர்ட் வதேரா 2004-ல் பரிசளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ. 8 லட்சமாகும். ரூ. 1.15 கோடி மதிப்புக்கு தங்க நகை ஆபரணங்கள் உள்ளன. இதுதவிர ரூ. 29.55 லட்சம் மதிப்பிலான 59.83 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளது.

மொத்தம் ரூ. 4 கோடியே 24 லட்சத்து 78 ஆயிரத்து 689க்கு அசையும் சொத்து உள்ளது. அவரது கணவர் ராபர்ட் வதேராவிடம் மொத்தம் ரூ.37.91 கோடிக்கு அசையும் சொத்து உள்ளது. அதே போல் அசையா சொத்துகளை எடுத்து கொண்டால் பிரியங்கா காந்தியிடம் ரூ.7 கோடியே 74 லட்சம் உள்ளது. அவரது கணவர் ராபர்ட் வதேராவிடம் ரூ.27 கோடியே 64 லட்சத்துக்கு அசையா சொத்துகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி மொத்தமாக பார்த்தால் பிரியங்கா காந்தியிடம் அசையும் மற்றும் அசையா சொத்துகள் என்று மொத்தம் சுமார் ரூ. 12 கோடிக்கு சொத்துகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக அவரது கணவர் ராபர்ட் வதேராவிடம் ரூ.65.55 கோடிக்கு சொத்துகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து