முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய சுற்றுப்பயணம் நிறைவு: நாடு திரும்பினார் பிரதமர் மோடி

வியாழக்கிழமை, 24 அக்டோபர் 2024      இந்தியா
PM-Modi 2024-10-24

புது டெல்லி, பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி நேற்று டெல்லி திரும்பினார்.

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி கடந்த 22-ம் தேதி ரஷ்யா  சென்றார். அங்கு  அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் புடினை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். 

அப்போது, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருப்பதாக உறுதி அளித்தார். பிரிக்ஸ் மாநாட்டில்  பங்கேற்க சீன அதிபர் ஜின்பிங், தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோசா ஆகியோரும் கசான் நகருக்கு சென்றிருந்தனர். 

பிரதமர் மோடி உள்ளிட்ட  பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் அனைத்து தலைவர்களுக்கும் புடின் விருந்து அளித்தார்.  மாநாட்டின்  2-வது நாளன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.  கடந்த 5 ஆண்டுகளில் இதுதான் அவர்களின் முதலாவது முன்கூட்டியே திட்டமிட்ட சந்திப்பு ஆகும். 

 இந்த சந்திப்பின் போது,  இரு நாடுகளுக்கும் இடையே உள்ள  வேறுபாடுகளையும், பிரச்சினைகளையும் முறையாக கையாள வேண்டும் என்றும், அவை அமைதியை சீர்குலைக்க அனுமதிக்கக் கூடாது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். 

இதையடுத்து,, பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் நாட்டின் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இதே போல ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயீத் அல் நஹ்யானையும் மோடி நேரில் சந்தித்து பேசினார்.  

பிரிக்ஸ் உச்சி மாநாடு நிறைவு பெற்ற நிலையில்,பிரதமர் மோடி தனது 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு    தனி விமானம் மூலம் ரஷ்யாவில் இருந்து புறபட்ட பிரதமர் மோடி நேற்று அதிகாலை டெல்லி பாலம் விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அதிகாரிகள் வரவேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து