முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் பங்கேற்க இதுவே சரியான நேரம்: சர்வதேச தொழிலதிபர்களுக்கு பிரதமர் அழைப்பு

வெள்ளிக்கிழமை, 25 அக்டோபர் 2024      இந்தியா
Modi 2024-10-25

புது டெல்லி, இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் சர்வதேச தொழிலதிபர்கள் பங்கேற்பதற்கு இதுவே சரியான நேரம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

டெல்லியில் துவங்கிய ஜெர்மானிய வணிகத்திற்கான இந்தியா - பசிபிக் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது,

இந்தியாவின் வளர்ச்சி பாதையில் பங்கேற்பதற்கு இதுவே சரியான நேரம். ஜெர்மன் தொழில்நுட்பம் இந்திய திறமையுடன்இணையும் போது, உலகத்திற்கு சிறந்த எதிர்காலத்தை அளிக்கும். 

வணிகத்தை தாண்டி, இந்தியாவைப் பற்றி ஆராய நேரம் ஒதுக்கவில்லை என்றால், பல அற்புதமான விஷயங்களை நீங்கள் இழக்க வேண்டியிருக்கும். நீங்கள் திரும்பி செல்லும் போது, நீங்களும், உங்கள் குடும்பமும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். 

12 ஆண்டுக்கு பிறகு, இந்த மாநாடு இந்தியாவில் முதல்முறையாக நடக்கிறது. ஒரு புறம் சி.இ.ஓ.க்கள் மாநாடு நடக்கிறது. மறுபுறம் இரு நாடுகளின் கடற்படை பயிற்சி நடக்கிறது. இது இந்தியா ஜெர்மனி உறவு பலப்படுவதை காட்டுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 5 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 hours ago
View all comments

வாசகர் கருத்து