முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழப்பத்தில் இருக்கிறார் நடிகர் விஜய்: மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 29 அக்டோபர் 2024      தமிழகம்
Murugan 2024-05-31

Source: provided

சென்னை : நடிகர் விஜய் தெளிவான பாதையைத் தேர்வு செய்யவோ, பயணிக்கவோ விரும்பவில்லை. அவர் குழப்பத்தில் உள்ளார் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

சென்னையில் நிருபர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறியதாவது,

நடிகர் விஜய் தெளிவான பாதையைத் தேர்வு செய்யவோ, பயணிக்கவோ விரும்பவில்லை. குழப்பத்தில் உள்ளார் என்பதை அவரது கொள்கைகள் காட்டுகின்றன. தேசியமும், தெய்வீகமும் இரு கண்கள் என்றிருந்தால் வரவேற்றிருப்போம். திராவிடம், தமிழ்த் தேசியம், இருமொழிக் கொள்கை என முரண்பட்டுள்ளார். 

திராவிடம், தமிழ் தேசம் ஒன்று என்று இருக்கிறார்கள். இருந்தாலும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் அவருக்கு மனதார தெரிவித்து கொள்கிறேன்.  நமது நாடு தான் உலகத்திலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு. மிகப் பெரிய ஜனநாயக நாட்டில், அவர் கட்சி ஆரம்பித்துள்ளார். 

அவரது செயல்பாடுகள் போக, போக தான் தெரியும். ஆனால் அவர் கொள்கை, கோட்பாடுகள் அறிவித்ததில் இருந்து, அவர் தெளிவான பாதையை தேர்ந்து எடுக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. தி.மு.க., நடத்துவது போலி திராவிட மாடல் ஆட்சி. அதனால் தான் அக்கட்சியை அதிகம் தாக்கிப் பேசியுள்ளார். ஆட்சியில் பங்கு கோரி, கட்சி தலைமை உத்தரவிடாமல், காங்கிரஸ் நிர்வாகி கடிதம் எழுத முடியுமா? இவ்வாறு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து