முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 426 கோடி செலவில் கட்டப்பட்ட 3,268 குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

செவ்வாய்க்கிழமை, 29 அக்டோபர் 2024      தமிழகம்
CM-1 2024-10-29

Source: provided

சென்னை : சென்னை, ஈரோடு, கோவை, கன்னியாகுமரி, திருச்சி, தஞ்சையில் ரூ. 426 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 3268 குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் சென்னையில் குப்பைமேடு திட்டப் பகுதியில் தரை மற்றும் ஏழு தளங்களுடன் 85 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவில் 500 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், சத்தியவாணி முத்து நகர் திட்டப் பகுதியில் தரை மற்றும் ஐந்து தளங்களுடன் 73 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் 438 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், டோபி கானா திட்டப் பகுதியில் தூண் மற்றும் நான்கு தளங்களுடன் 31 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவில் 272 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், சந்திரயோகி சமாதி திட்டப் பகுதியில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் 38 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் 240 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், ராதாகிருஷ்ணபுரம் திட்டப் பகுதியில் தரை மற்றும் ஐந்து தளங்களுடன் 25 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் 168 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டம், குள்ளங்கரடு திட்டப் பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 37 கோடியே 44 லட்சம் ரூபாய் செலவில் 416 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், அக்கரை கொடிவேரி திட்டப் பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 21 கோடியே 81 லட்சம் ரூபாய் செலவில் 256 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், 

கன்னியாகுமரி மாவட்டம், குமாரபுரம் திட்டப் பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 30 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் 288 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், 

கோயம்புத்தூர் மாவட்டம், சி.எம்.சி.காலனி – 2 திட்டப் பகுதியில் தரை மற்றும் ஐந்து தளங்களுடன் 25 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் 222 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், வெரைட்டிஹால் ரோடு திட்டப் பகுதியில் தரை மற்றும் ஐந்து தளங்களுடன் 24 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் 192 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், 

தஞ்சாவூர் மாவட்டம், வலையன் வயல் திட்டப் பகுதியில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 19 கோடியே 2 லட்சம் ரூபாய் செலவில் 168 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்,  திருச்சி மாவட்டம், டாக்டர் ஜே.ஜே.நகர் பகுதி – 2 திட்டப் பகுதியில் தரை மற்றும் 2 தளங்களு டன் 12 கோடியே 47 லட்சம் ரூபாய் செலவில் 108 புதியஅடுக்கு மாடி குடியிருப்புகள் என மொத்தம் 426 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3 ஆயிரத்து 268 குடியிருப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து