முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான ஸ்லெட் தகுதித்தேர்வை விரைவில் நடத்துகிறது ஆசிரியர் தேர்வு வாரியம்

செவ்வாய்க்கிழமை, 29 அக்டோபர் 2024      தமிழகம்
Teacher 2024-10-29

Source: provided

சென்னை : கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான ஸ்லெட் தகுதித் தேர்வை  விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த இருக்கிறது. 

பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர வேண்டுமால் நெட் அல்லது ஸ்லெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். நெட் தேர்வை யு.ஜி.சி. சார்பில் தேசிய தேர்வு முகமையும், ஸ்லெட் தேர்வை அந்தந்த மாநில அரசின் சார்பில் ஏதேனும் ஒரு பல்கலைக் கழகமும் நடத்தும். 

அந்த வகையில், தமிழகத்தில் ஸ்லெட் தகுதித் தேர்வை 2024 முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு நடத்த நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதைத் தொடர்ந்து, ஸ்லெட் தேர்வுக்கான அறிவிப்பை அப்பல்கலைக் கழகம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டு அதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் வழியாக ஏப்ரல் 1 முதல் 30 வரை பெற்றுக் கொண்டது. 

தேர்வு ஜூன் 7 மற்றும் 8-ம் தேதி கணினி வழியில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஹால் டிக்கெட்டும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், தேர்வு தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பாக, தொழில்நுட்பக் காரணங்களால் ஸ்லெட் தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், தேர்வெழுத தயாராக இருந்த ஸ்லெட் தேர்வர்கள் பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளானார்கள்.

அதன் பிறகு 4 மாதங்கள் ஆகியும் ஸ்லெட் தேர்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில், ஸ்லெட் தேர்வை நடத்தும் பொறுப்பை தமிழக அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைத்துள்ளது. எனவே, ஸ்லெட் தேர்வை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்துக்கு பதிலாக ஆசிரியர் தேர்வு வாரியமே தேர்வை நடத்தும். ஸ்லெட் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களின் அனைத்து தரவுகளும் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து ஸ்லெட் தேர்வை விரைவில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து