முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டில் வளர்ச்சிப்பணிகள் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது : பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

செவ்வாய்க்கிழமை, 29 அக்டோபர் 2024      இந்தியா
Modi

Source: provided

புதுடெல்லி : ஒவ்வொரு இளைஞருக்கும் வாய்ப்பளிக்கும் அமைப்பை அரசு உருவாக்குகிறது என்று தெரிவித்த பிரதமர் மோடி, வளர்ச்சிப் பணிகள் மக்களுக்கு வசதிகளை வழங்குவது மட்டுமல்லாமல் வேலை வாய்ப்புகளையும் உருவாக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

மத்திய அரசின் வேலைவாய்ப்பு முகாம் திட்டத்தின் கீழ், அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு இன்று பிரதமர் நரேந்திர மோடி, வேலைகளுக்கான நியமனக் கடிதங்களை காணொலி மூலமாக வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து 'ரோஸ்கர் மேளா'வில் உரையாற்றிய அவர், "ரோஸ்கர் மேளாவில் 51 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசுப் பணிக்கான நியமனக் கடிதங்களை வழங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் அடி எடுத்து வைக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் வாழ்த்துகள். நாட்டின் இளைஞர்கள் அதிகபட்ச வேலைவாய்ப்பைப் பெற வேண்டும் என்பது எங்கள் உறுதி. இன்று இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தை நோக்கி நகர்கிறது. ஒவ்வொரு புதிய தொழில்நுட்பத்திலும் மேக் இன் இந்தியாவை ஊக்குவித்தோம், தன்னம்பிக்கை இந்தியாவுக்காக உழைத்தோம்.

முந்தைய அரசாங்கங்கள் கொள்கை மற்றும் எண்ணம் இல்லாததால், நவீன தொழில்நுட்பங்கள் உட்பட உயரும் துறைகளில் உலகை விட இந்தியா பின்தங்கியது. பழைய மற்றும் காலாவதியான தொழில்நுட்பங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. நம் நாட்டில் நவீன தொழில்நுட்பங்கள் வளர முடியாது என்று நம்பும் ஒரு மனநிலை இருந்தது. இந்த எண்ணம் எங்களுக்கு நிறைய தீங்கு விளைவித்தது.

நவீன உலகில் வேலைவாய்ப்பை உருவாக்கும் தொழில்கள் நாட்டில் இல்லை என்றால், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது கடினமாக இருக்கும். முந்தைய அரசாங்கங்களின் பழைய மனநிலையிலிருந்து நாட்டை விடுவிப்பதற்கான பணிகளை நாங்கள் தொடங்கினோம். அதிகபட்ச மக்களுக்கு வேலை வழங்குவது எங்கள் அரசாங்கத்தின் உறுதிப்பாடு. குடிநீர் மற்றும் எரிவாயு குழாய்கள் பதிக்கப்படுகின்றன, பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுகின்றன, வளர்ச்சிப் பணிகள் மக்களுக்கு வசதிகளை வழங்குவது மட்டுமல்லாமல் வேலை வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன.

எங்கள் அரசாங்கத்தின் கண்காணிப்பில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான ஸ்டார்ட்அப்கள் தொடங்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடிக்கும் அதிகமான இளைஞர்களை உள்வாங்க முற்படும் இளைஞர்களுக்கான ஊதியத்துடன் கூடிய இன்டர்ன்ஷிப் திட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ், இந்தியாவின் சிறந்த 500 நிறுவனங்களில் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய இளைஞர்களுக்கு குடியேற்றம் மற்றும் வேலைவாய்ப்பை எளிதாக்க 21 நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. ஒவ்வொரு இளைஞர்களுக்கும் வாய்ப்பளிக்கும் அமைப்பை அரசு உருவாக்குகிறது." என்று பிரதமர் மோடி கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து