முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் வரும் 2-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்

செவ்வாய்க்கிழமை, 29 அக்டோபர் 2024      தமிழகம்
Rain 2023-09-29

Source: provided

சென்னை : தமிழகத்தில் வரும் 2-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து சென்னை வானிலை மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 

இன்று 31-ம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்காலில்  நாளை 31-ம் தேதி, வரும் 1,2 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.  தமிழ்நாட்டில் வரும் 1-ம் தேதி  தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர் ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

வரும்  2-ம் தேதி  தென்காசி, நெல்லை, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, குமரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 1,2-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

சென்னையில் 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். . நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை. இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து