முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி - குரு பூஜை விழா: பசும்பொன் தேவர் நினைவிடத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் மரியாதை: அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 29 அக்டோபர் 2024      தமிழகம்
CM-1 2024-03-10

Source: provided

சென்னை : முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் 62-வது குரு பூஜை விழாவை முன்னிட்டு  பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் இன்று 

முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அவருடன் தமிழக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

கொள்கைகளை...

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்று, முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். இது தொடர்பாக செய்தி, மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது.,  பசும்பொன் தேவர் ஆன்மீகம், தேசியம், பொதுவுடைமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு ஆகிய முக்கியக் கொள்கைகளைத் தன் வாழ்நாளில் இறுதிவரை உறுதியாகப் பின்பற்றியவர். 

ஆண்டுதோறும்... 

முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் தேவர் ஜெயந்தி விழாவாக தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் அக்டோபர் 30-ம் (இன்று) நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

முதல்வர் மரியாதை...

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது பிறந்த நாள் மற்றும் 62-வது குருபூஜையை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் 30.10.2024 அன்று காலை தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் பெருமக்களும், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்கள். 

கோரிப்பாளையத்தில்... 

அதேநாளில், முதல்வர் மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கும், மதுரை, தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர் மருது சகோதரர்கள் திருவுருவச்சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போக்குவரத்து....

தேவர் ஜெயந்தி விழாவையொட்டி, மதுரையில் நேற்றும், இன்றும் இரு நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மதுரை மாநகரக் காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு.,  தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, செவ்வாய், புதன்கிழமைகளில் (அக்டோபர் 29, 30) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இரு நாட்களும் லாரிகள், கனகர வாகனங்கள் காலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை நகருக்குள் நுழைய தடை செய்யப்படுகிறது. தேவர் ஜெயந்தி விழாவுக்கு வரும் வாகனங்களைத் தவிர, மற்ற வாகனங்கள் தேவர் சிலை நோக்கி வரும் சாலைகளில் செல்வதற்கு அனுமதி இல்லை.

நத்தம் சாலையில்...

நத்தம் சாலை, அழகர்கோவில் சாலை ஆகிய பகுதிகளிலிருந்து தேவர் ஜெயந்தி விழாவுக்காக, ராமநாதபுரம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் பெரியார் சிலை பகுதியில் திரும்பி மாற்றுப் பாதையாக ராஜா முத்தையா மன்றம், கே.கே.நகர் ஆர்ச், ஆவின் சந்திப்பு, அண்ணாநகர் பிரதான சாலை, பி.டி.ஆர் பாலம், வைகை தென்கரை சாலை, விரகனூர் ரவுண்டானா வழியாகச் செல்ல வேண்டும். மாட்டுத்தாவணி, ஆவின் சந்திப்பு ஆகிய பகுதிகளிலிருந்து நத்தம் சாலைக்கு வரும் அரசு நகரப் பேருந்துகள், பொதுமக்கள் வாகனங்கள் ராஜா முத்தையா மன்றம், தாமரைத் தொட்டி சந்திப்பு வழியாக புது நத்தம் சாலையில் செல்ல வேண்டும்.

தெற்கு வெளி வீதி... 

மாட்டுத்தாவணியிலிருந்து நகருக்குள் செல்லும் வாகனங்கள் அனைத்தும் கே.கே.நகர் ஆர்ச், ஆவின் சந்திப்பு, குருவிக்காரன் சாலை சந்திப்பு ரவுண்டானா, கணேஷ் திரையரங்கு சந்திப்பு வழியாக, முனிச்சாலை சந்திப்புக்கு சென்று, இடதுபுறம் திரும்பி, பழைய குயவர்பாளையம், செயின்ட் மேரீஸ் சந்திப்பு, தெற்கு வெளி வீதி வழியாக நகருக்குள் செல்ல வேண்டும். 

நகருக்குள் வராமல்... 

தேவர் ஜெயந்தி விழாவுக்காக பசும்பொன் செல்லும் பிற மாவட்ட வாகனங்கள் நகருக்குள் செல்ல காவல் துறையால் அனுமதிக்கப்பட்ட வாகனங்களைத் தவிர, இதர வாகனங்கள் நகருக்குள் வராமல் சுற்றுச்சாலை வழியாகச் செல்ல வேண்டும். கோரிப்பாளையம் தேவர் சிலை சந்திப்புக்குச் செல்ல எந்த ஒரு இரு சக்கர வாகனத்துக்கும் அனுமதி இல்லை. இந்த விழாவுக்கு வரக்கூடிய இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் தமுக்கம் மைதானம், அண்ணா பேருந்து நிலையம், எம்.எம்.லாட்ஜ் சந்திப்பு ஆகிய இடங்களில் நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து