முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளியை முன்னிட்டு சென்னை மெட்ரோ சேவை நீட்டிப்பு

செவ்வாய்க்கிழமை, 29 அக்டோபர் 2024      தமிழகம்
Metro-Rail 2024-03-28

Source: provided

சென்னை : தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிகாக மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரெயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது; தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரெயில் பயணிகளின் வசதிகாக இன்று 30.10.2024 (புதன்கிழமை) மெட்ரோ ரெயில் சேவைகள் பின்வரும் அட்டவணையின் படி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மெட்ரோ ரெயில் சேவை: காலை மணி முதல் இரவு 12 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். (முதல் மெட்ரோ ரெயில் அனைத்து முனையங்களிலிருந்தும் காலை 5 மணிக்குப் புறப்படும் மற்றும் கடைசி மெட்ரோ ரெயில் அனைத்து முனையங்களிலிருந்தும் இரவு 12 மணிக்கு புறப்படும்) காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை: பச்சை வழித்தடத்தில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

நீல வழித்தடத்தில் விம்கோ நகர பணிமனை மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். நீல வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இடையே 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். காலை 5 மணி முதல் 8 மணி வரை மற்றும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 11 மணி வரை: பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்

31.10.2024 (வியாழக்கிழமை) மற்றும் 01.11.2024 (வெள்ளிக்கிழமை) மெட்ரோ ரெயில்கள் விடுமுறை நாள் அட்டவணையின்படி இயங்கும். 1. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். 2 காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். 3. மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். 4. இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து