முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

29 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 31 லட்ச ரூபாய் நிதியுதவியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 29 அக்டோபர் 2024      தமிழகம்
Udayanidhi 2024-10-29

Source: provided

சென்னை : தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து 29 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ. 31.95 லட்சத்திற்கான காசோலைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். ஒரு சைக்கிள் பந்தைய வீரருக்கு ரூ. 8.60 லட்சம் மதிப்பிலான அதிநவீன பந்தைய சைக்கிள் என மொத்தம் 30 விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு 40,55,000 ரூபாய்க்கான விளையாட்டு போட்டிகளுக்கான உதவிகளை வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து, சீனாவில் வருகின்ற டிச. 1 முதல் 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 4 வது உலக ஜூனியர் சாப்ட் டென்னிஸ் போட்டியில் (சிறுவர் மற்றும் சிறுமியர்) கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ள 24 வீரர், வீராங்கனைகளுக்கு போட்டிக்கான செலவினமாக தலா ரூ.1,00,000 ரூபாய் வீதம் 24,00,000 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

தாய்லாந்து நாட்டில் 1.12.2024 முதல் 7.12.2024 வரை நடைபெறவுள்ள உலக திறன் விளையாட்டு இளைஞர் போட்டியில் கலந்து கொள்ள உள்ள 5 நரம்பியல் சார் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு விமான கட்டணம், தங்குமிட செலவினம் மற்றும் போட்டிக்கான நுழைவு கட்டணத்திற்க்கான மொத்த செலவுத்தொகை 7,95,000 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். 

சைக்கிளிங் விளையாட்டு வீரர் திரு.சூர்யபிரகாஷ் அவர்களுக்கு ரூ.8,60,000/- மதிப்பிலான அதிநவீன பந்தய சைக்கிளை வழங்கினார். ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து மொத்தம் 30 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.40,55,000 ரூபாய்க்கான விளையாட்டு போட்டிகளுக்கான உதவிகளை வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து