முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2024      தமிழகம்
Thiruchendur-Temple

சென்னை, திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தையொட்டி கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 2-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடந்தது. சூரசம்ஹாரத்தை காண உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்திருந்தனர்.

 இந்த நிலையில், திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 

சூரசம்ஹார வைபவத்தில் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த நாளில் முருகப்பெருமான் நம் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், வளம் மற்றும் அளவற்ற மகிழ்ச்சியைப் பெருக்கி, அறியாமையின் நிழலில் இருந்து வெளிவரும் துணிச்சல், வலிமை, ஞானம் ஆகியவற்றை வழங்கி, நமக்குள்ளும் நம்மை சுற்றியும் பீடித்துள்ள தீய சக்திகளை வீழ்த்தி, தர்மத்தையும் நியாயத்தையும் உறுதிப்படுத்த அருள்புரிவராக. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. இவ்வாறு அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து