முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹேமா கமிஷன் அறிக்கை: சி.பி.ஐ. விசாரணை கோரிய மனுவுக்கு கேரள அரசு எதிர்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2024      இந்தியா
Hema 2024-11-17

Source: provided

புதுடெல்லி : ஹேமா கமிஷன் அறிக்கை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரிய மனுவுக்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மலையாள சினிமா உலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் குறித்து விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கை மலையாள சினிமா உலகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பிறகு பல்வேறு நடிகைகளும் தங்களுக்கு நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி திரைப்படத் தயாரிப்பாளர் சஜிமோன் பாறயில் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மேல்முறையீடு மனுவுக்கு கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 

அதில், "ஹேமா கமிஷன் அறிக்கை விவகாரத்தில் சிறப்பு விசாரணைக்குழுவை கேரள ஐகோர்ட்டு ஏற்கனவே அமைத்து உத்தரவிட்டுள்ளது. ஹேமா கமிஷன் அறிக்கை விவகாரத்தில் சிறப்பு விசாரணை குழு இதுவரை 26 முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்துள்ளது, 10 வழக்குகளில் முதல்கட்ட விசாரணை நடைபெற்றுள்ளது. முதல்கட்ட விசாரணை 14 நாட்களுக்குள் நிறைவடையும். சிறப்பு விசாரணைக்குழு அமைத்து கேரள ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் எவ்வித தவறும் இல்லை. எனவே சி.பி.ஐ. விசாரணை கோரும் இந்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து