எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : பேரிடர் துயர் தணிப்பு பணி மற்றும் மறு சீரமைப்பு நடவடிக்கைகளை மாநிலங்கள் உடனுக்குடன் மேற்கொள்ளும் வகையில் உரிய நிதியை வழங்கிட 16-வது நிதிக்குழு பரிந்துரைக்க வேண்டுமென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகம் சந்தித்து வரும் மூன்று குறிப்பிடத்தக்க சவால்களை நிதிக்குழுவின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். கடந்த சில ஆண்டுகளாக, இயற்கைப் பேரிடர்களின் தாக்கத்தினால் தமிழகம் பெரும் பேரிழவினை சந்தித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு புயல்கள் மற்றும் இடைவிடாத மழைப்பொழிவு மற்றும் வெள்ளத்தினால் பொதுமக்களின் உயிர், உடைமை மற்றும் வாழ்வாதாரம் மட்டுமின்றி மாநிலத்தின் கட்டமைப்பு வசதிகளும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன.
இயற்கைப் பேரிழிவுகளினால் ஏற்படும் இழப்புகளை சரிசெய்வதற்கு பெரும் அளவிலான நிதி மாநில அரசால் செலவிடப்பட வேண்டிய தேவை உள்ளதால், வழக்கமான வளர்ச்சித் திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே இத்தகைய பேரிடர் துயர் தணிப்பு பணி மற்றும் மறு சீரமைப்பு நடவடிக்கைகளை மாநிலங்கள் உடனுக்குடன் மேற்கொள்ளும் வகையில் உரிய நிதியை வழங்கிட நிதிக்குழு பரிந்துரைக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்து, தமிழகத்தில் அதிகமாக வளர்ந்துவரும் முதியவர்களின் எண்ணிக்கை மற்றும் இதன்காரணமாக மாநில மக்கள் தொகை அமைப்பில் ஏற்படும் மாற்றம் குறித்தும் நிதிக்குழுவின் கவனத்துக்கு கொண்டுவர விழைகிறேன். தற்போது தமிழகத்தின் மக்கள் தொகையின் சராசரி வயது 36.4 ஆண்டுகள். இது உத்திரப்பிரதேச மாநிலத்தின் சராசரி அளவை விட 9.5 ஆண்டுகள் அதிகம். 16-வது நிதிக்குழுவின் பரிந்துரைக் காலம் முடிவடையும் பொழுது தமிழ்நாட்டின் சராசரி வயதானது 38.5 ஆண்டுகளாக இருக்கும். அதன்படி, நாட்டிலேயே வயதானவர்கள் அதிகம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உருவெடுக்கும்.
தமிழகம் இதுவரை பெற்று வந்துள்ள மக்கள்தொகை அடிப்படையிலான பயன் வேகமாகக் குறைந்து வருவதையும் சமூகப் பாதுகாப்புத் தேவைகள் அதிகரித்து வருவதையும் இது பிரதிபலிக்கிறது. அதிகரித்து வரும் முதியவர்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கு எதிர்வரும் பத்து ஆண்டுகளில் தமிழகம், தேவையான பொருளாதார வளர்ச்சியினை அடைவதுடன் பல்வேறு துறைகளில் அதிக முதலீடுகளை உடனடியாக செய்ய வேண்டியுள்ளது.
அந்த முயற்சியை மேற்கொள்ளாவிடில் முன்னேறிய மாநிலமாக மாறுவதற்கு முன்னால், முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக தமிழகம் மாறிவிடும் அபாயத்தை இன்று சந்தித்து வருகிறது. இந்த மிகமுக்கியமான கருத்தை நிதிக்குழு கவனத்தில் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்வதுடன், இந்த சமூக முதலீடுகளுக்குதேவையான நிதி ஆதாரத்தையும் தமிழகத்துக்கு வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
மூன்றாவதாக, நாட்டிலேயே அதிக நகரமயமாக்கலைச் சந்தித்து வரும் மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. நகர்ப்புர கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதும், அதற்கான நிதி ஆதாரங்களை பெருக்குவதும் தமிழ்நாடு சந்தித்து வரும் ஒரு மிக முக்கியமான சவால்களில் ஒன்றாக இருக்கிறது. குறைவான நில வளம் மற்றும் நீர் வளம் ஒருபுறம், தொடர்ந்து அதிகரித்து வரும் மக்கள் தொகை மறுபுறம் - இவற்றுக்கு இடையே சென்னை போன்ற நகரங்களில் வாழ்ந்திடும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், சாலை வசதி மற்றும் தெரு விளக்குகள் அமைத்திடத் தேவையான முதலீடுகளைச் செய்திடவும் உள்ளாட்சி அமைப்புகளின் தரமான சேவைகளைத் தொடர்ந்து வழங்கிடவும், நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அளவிலான நிதி மற்றும் மானியங்களை வழங்கிட நிதிக்குழு பரிந்துரை செய்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
மாநிலங்களின் செலவினங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகமாக உயர்ந்து வரும் வேளையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி)முறை நடைமுறைக்கு வந்த பின்னர் மாநில அரசுகள் தங்களுக்கு தேவையான நிதி ஆதாரங்களைப் பெருக்குவதில் பல தடைகளை சந்தித்து வருகின்றன. இதனால் ஒன்றிய அரசின் நிதிப்பகிர்வை மாநிலங்கள் மிகவும் சார்ந்திருக்கக் கூடிய இன்றைய காலகட்டத்தில் 16-வது நிதிக்குழுவின் பங்கும், அதன் பரிந்துரைகளும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.
16-வது நிதிக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நான் பணிவுடன் சொல்லிக் கொள்வதெல்லாம் தமிழகத்தின் 8 கோடி மக்களும் இந்த நிதிக்குழுவின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள். மாநிலங்களின் வளர்ச்சியை உறுதி செய்வதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை அடைந்திடும் நோக்கில் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் ஒரு அரியவாய்ப்பை காலம் நமக்கு வழங்கி இருக்கிறது. இதைக் கருத்திற்கொண்டு 16-வது நிதிக்குழு உரிய பரிந்துரைகளை வழங்கும் என்று நான் நம்புகிறேன்.
தமிழக அரசின் சார்பாக நிதிக்குழுவின் பரிசீலனைக்கு வழங்கப்பட இருக்கும் விரிவான அறிக்கையினை கவனத்துடன் பரிசீலித்து, கடந்த காலங்களில் பல்வேறு நிதிக்குழுக்களின் பரிந்துரைகளினால் தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு உரிய தீர்வை 16-வது நிதிக்குழு வழங்கும் என்று உறுதியாக நம்புகிறோம். சமச்சீரான வாய்ப்புகளை வழங்கும் முற்போக்கான அணுகுமுறையின் மூலமாகவே இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தின் உண்மையான நோக்கத்தை அடைந்திட இயலும் என்பது எங்களுடைய திடமான நம்பிக்கை. ஒவ்வொரு மாநிலமும் அவற்றின் முழு திறனுக்கு ஏற்றவகையில் வளர்ச்சியை எட்டுவதன் மூலமாகவே இந்தியத் திருநாட்டை உலக அரங்கில் பொருளாதார வலிமை கொண்ட ஒரு மாபெரும் நாடாக நிலைநிறுத்த முடியும்,
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 2 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 2 weeks ago |
-
4 நாட்கள் அரசு முறை பயணமாக வரும் 27-ம் தேதி தமிழகம் வருகிறார் ஜனாதிபதி முர்மு
17 Nov 2024சென்னை : 4 நாட்கள் அரசு முறை பயணமாக 27-ம் தேதி தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரெபதி முர்மு.
-
கர்நாடகாவில் சோகம்: நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் பலி
17 Nov 2024கர்நாடகா : கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் களமிறங்கும் தொகுதி? - வெளியான தகவலால் பரபரப்பு
17 Nov 2024சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் களமிறங்கும் தொகுதி குறித்து வெளியான தகவலால் த.வெ.க. தொண்டர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
தென்காசி: திருமண விழாவில் மதுவிருந்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டி படுகொலை
17 Nov 2024தென்காசி : தென்காசியில் திருமண விழாவையொட்டி நடந்த மதுவிருந்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்திய அணியில் சாய் சுதர்சன்
17 Nov 2024இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
-
இந்திய அணிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்குவது அவசியம் : முன்னாள் கேப்டன் கங்குலி வலியுறுத்தல்
17 Nov 2024மும்பை : இந்திய அணிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்குவது அவசியம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி வலியுறுத்தியுள்ளார்.
-
மணிப்பூரில் தொடரும் வன்முறை: பா.ஜ.க. அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற தேசிய மக்கள் கட்சி
17 Nov 2024இம்பால் : மணிப்பூர் வன்முறையை அடுத்து பா.ஜ.க. அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றது தேசிய மக்கள் கட்சி.
-
அமெரிக்காவில் அரசு வேலை குறைப்பு: புதிய நிர்வாகி விவேக் ராமசாமி தகவல்
17 Nov 2024வாஷிங்டன் : அமெரிக்காவில் அரசு வேலை பெருமளவில் குறைக்கப்படும் என, ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய நிர்வாகி விவேக் ராமசாமி கூறியுள்ளார்.
-
அஸ்வினுக்கு எதிராக கவனமாக விளையாட ஸ்மித் எச்சரிக்கை
17 Nov 2024பெர்த் : அஸ்வினுக்கு எதிராக கவனமுடன் விளையாடுவது அவசியம் என ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சகோதரர் மறைவு
17 Nov 2024ஐதராபாத் : ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இளைய சகோதரர் ராமமூர்த்தி நாயுடு [வயது 72] காலமானார்.
-
துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் மணமகளுக்கு தாலி கட்ட முயன்ற தாயால் மேடையில் சிரிப்பலை
17 Nov 2024சென்னை : துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற திருமணவிழாவில் மணமகளுக்கு தாலி கட்ட முயன்ற தாயால் மேடையில் சிரிப்பலை எழுந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-11-2024.
18 Nov 2024 -
ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்
17 Nov 2024மும்பை : ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தியாகத்தின் உச்சம்: வ.உ. சிதம்பரனாருக்கு கமல்ஹாசன் புகழாரம்
18 Nov 2024சென்னை, தியாகத்தின் உச்சம் வ.உ. சிதம்பரனார் என்று அவரது நினைவு நாளில் மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
-
பெங்களூரு தலைமையகத்தை மாற்ற அமேசான் திடீர் முடிவு?
18 Nov 2024பெங்களூரு : உலகின் மிகப்பெரிய இ காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியாவில் மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கி வைத்திருக்கிறது.
-
வேத மந்திரங்கள் முழங்க பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரேசிலில் உற்சாக வரவேற்பு
18 Nov 2024ரியோ டி ஜெனீரோ, நைஜீரியாவில் ஆக்கப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அதனை முடித்து கொண்டு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகருக்கு நேற்று காலை சென்று சேர்ந்த
-
காற்று மாசு அதிகரிப்பால் வட மாநிலங்களில் மருத்துவ அவசரநிலை ஏற்பட்டுள்ளது: டெல்லி முதல்வர் அதிஷி தகவல்
18 Nov 2024புதுடெல்லி, காற்று மாசு அதிகரிப்பால் வட மாநிலங்களில் மருத்துவ அவசர நிலை ஏற்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அதிஷி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
-
2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான சூழலா? - வி.சி.க. தலைவர் திருமாவளவன் விளக்கம்
18 Nov 2024புதுக்கோட்டை : '2026ம் ஆண்டு வரும் தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான சூழல் இல்லை' என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
-
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மருத்துவமனை தீ விபத்தில் 7 குழந்தைகளை மீட்ட நபர்
18 Nov 2024லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள மகாராணி லட்சுமி பாய் மருத்துவக் கல்லூரியின் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் தீ பற்றிய அடுத்த வினாடியே சற்றும் யோசிக்காமல், யா
-
ஈரான் உயர் தலைவரை ரகசியமாக தேர்வு செய்த அயத்துல்லா காமேனி
18 Nov 2024ஈரான் : ஈரான் உயர் தலைவரை அயத்துல்லா காமேனி ரகசியமாக தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அதிபர் அனுரகுமார முன்னிலையில் இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு
18 Nov 2024கொழும்பு, அதிபர் முன்னிலையில் இலங்கையின் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூர்ய (54) திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
-
போக்குவரத்து நெரிசல் அதிரிப்பு எதிரொலி: சென்னையில் நூற்றுக்கணக்கான பஸ் நிறுத்தங்கள் இடம் மாற்றம்?
18 Nov 2024சென்னை. போக்குவரத்து நெரிசல் அதிரிப்பு காரணமாக சென்னையில் நூற்றுக்கணக்கான பஸ் நிறுத்தங்கள் இடம் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
இந்தவாரம் வெளியாகும் நிறங்கள் மூன்று
18 Nov 2024ஐங்கரன் இண்டர்நேஷனல் கருணாமூர்த்தி தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர்கள் அதர்வா முரளி, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில்
-
வாத்தியார் படத்தின் டீஸர் வெளியீடு
18 Nov 2024நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'வா வாத்தியார்' என்ற படத்தில் கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஆனந்த் ராஜ், ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன், ஜி.