முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெர்த் டெஸ்ட் முதல் இன்னிங்ஸ்: இந்திய அணி பந்துவீச்சில் ஆஸ்திரேலியா திணறல் : முதல் நாளில் 67 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது

வெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2024      விளையாட்டு
India-test-cricker--2024-09

Source: provided

பெர்த் : பெர்த் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி பந்துவீச்சில் ஆஸ்திரேலியா திணறி வருகிறது. முதல் நாளில் 67 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 

சுற்றுப்பயணம்... 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். வேகத்துக்கு சாதகமான இந்த மைதானத்தில் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி ஆஸ்திரேலிய பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விரைவில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

150 ரன்களில்... 

முதல் இன்னிங்சில் 49.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்தியா 150 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 41 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளும், ஸ்டார்க், கம்மின்ஸ் மற்றும் மார்ஷ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய கேப்டன் பும்ரா பதிலடி கொடுத்தார். அவரது பந்துவீச்சில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன கவாஜா 8 ரன்களிலும், நாதன் மெக்ஸ்வீனி 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவ் சுமித்தை கோல்டன் டக் ஆக்கி வெளியேற்றினார்.

முகமது சிராஜ்...

அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஹர்ஷித் ராணா, டிராவிஸ் ஹெட்டை கிளீன் போல்டாக்கினார். சிராஜ் தனது பங்குக்கு மிட்செல் மார்ஷ் மற்றும் லாபுசாக்னே விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். இதில் மார்னஸ் 52 பந்துகளை சந்தித்து வெறும் 2 ரன்கள் மட்டுமே அடித்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களில் இதுவரை யாரும் 20 ரன்களை கூட தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

67 ரன்களுடன்... 

முதல் நாளில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்களுடன் தடுமாறி வருகிறது. அலெக்ஸ் கேரி 19 ரன்களுடனும், ஸ்டார்க் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளும், சிராஜ் 2 விக்கெட்டுகளும், ஹர்ஷித் ராணா 1 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர். ஆஸ்திரேலியா இன்னும் 83 ரன்கள் பின்தங்கி உள்ளது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. 

ரிஷப் பண்ட் சாதனை 

ரிஷப் பண்ட் இந்த இன்னிங்சில் அடித்த ரன்களையும் சேர்த்து டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை 661 ரன்கள் அடித்துள்ளார். இதன் மூலம் 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக ரன்கள் அடித்த வெளிநாட்டு விக்கெட் கீப்பர் என்ற மாபெரும் சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார். 

ஸ்கோர் கார்டு - முதல் இன்னிங்ஸ்

ஆஸ்திரேலியா 67/7. (முதல் நாள்)

1) உஸ்மான் கவாஜா - 8.

2) நாதன் மெக்ஸ்வீனி - 10.

3) மார்னஸ் லபுஷேன் - 2.

4) ஸ்டீவ் ஸ்மித் - 0.

5) டிராவிஸ் ஹெட் - 11.

6) மிட்செல் மார்ஷ் - 6.

7) அலெக்ஸ் கேரி - 19*.

8) பாட் கம்மின்ஸ் - 3.

9) மிட்செல் ஸ்டார்க் - 6*

இந்தியா சார்பில் பும்ரா 4 , சிராஜ் 2, ஹர்சித் ராணா 1 விக்கெட்டும் எடுத்து அசத்தினார்கள்.

இந்தியா 150/10

1) யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 0.

2) கே.எல்.ராகுல் - 26.

3) தேவ்தத் படிக்கல் - 0.

4) விராட் கோலி - 5.

5) ரிஷப் பந்த் - 37.

6) துருவ் ஜூரெல் - 11.

7) வாஷிங்டன் சுந்தர் - 4.

8) நிதீஷ் ரெட்டி - 41.

9) ஹர்ஷித் ராணா - 7.

10) ஜஸ்ப்ரீத் பும்ரா - 8.

11) முகமது சிராஜ் - 0*

ஆஸி. சார்பில் ஹேசில்வுட் 4, கம்மின்ஸ்,ஸ்டார்க், மார்ஷ் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து