முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

72 ஆண்டுகளுக்கு பிறகு புதிய வரலாறு: முதல் நாளில் 17 விக்கெட்டுகள் வீழ்ந்தது இதுவே முதல்முறை

வெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2024      விளையாட்டு
INDIA-1 2024-10-23

Source: provided

பெர்த் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 72 ஆண்டுகால வரலாறு உடைக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டி முதல் நாளில் 17 விக்கெட்டுகள் வீழ்ந்தது இதுவே முதல் முறை.

முதல் இன்னிங்ஸ்...

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நேற்று (நவம்பர் 22) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா பேட்டிங்கைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

17 விக்கெட்டுகள்...

இதனையடுத்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்கள் எடுத்துள்ளது. பெர்த் மைதானத்தில் முதல் நாளில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும். ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகளையும், இந்திய அணி 7 விக்கெட்டுகளையும் இன்று (நவம்பர் 22) ஒரே நாளில் கைப்பற்றியது. இந்த 17 விக்கெட்டுகளையும் வேகப் பந்துவீச்சாளர்களே கைப்பற்றியுள்ளனர். இதற்கு முன்னதாக, பெர்த் மைதானத்தில் முதல் நாளில் அதிக விக்கெட்டுகள் 1952 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து