முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் அறிவுசார் பாரம்பரியத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் : ஐதராபாத் விழாவில் ஜனாதிபதி முர்மு பேச்சு

வெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2024      இந்தியா
Murmu 2024-11-22

Source: provided

ஐதராபாத் : அனைத்து மக்களும் இந்தியாவின் கலாச்சார மற்றும் அறிவுசார் பாரம்பரியத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்தார். 

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நேற்று  நடைபெற்ற லோக்மந்தன்-2024 தொடக்க விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,

இந்தியாவின் வளமான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் மரபுகளில் ஒற்றுமையின் இழைகளை வலுப்படுத்த இந்நிகழ்ச்சி ஒரு பாராட்டத்தக்க முயற்சி. அனைத்து மக்களும் இந்தியாவின் கலாச்சார மற்றும் அறிவுசார் பாரம்பரியத்தை புரிந்து கொள்ள வேண்டும். நமது விலைமதிப்பற்ற மரபுகளை வலுப்படுத்த வேண்டும்.

பன்முகத்தன்மை நமது அடிப்படை ஒற்றுமைக்கு அழகின் வானவில்லை வழங்குகிறது. நாம் வனவாசிகளாக இருந்தாலும், கிராமவாசிகளாக இருந்தாலும் அல்லது நகரவாசிகளாக இருந்தாலும், நாம் அனைவரும் இந்தியர்கள். 

இந்த தேசிய ஒற்றுமை உணர்வு அனைத்து சவால்களையும் மீறி நம்மை ஒற்றுமையாக வைத்திருக்கிறது. நமது சமூகத்தைப் பிளவுபடுத்தவும் பலவீனப்படுத்தவும் பல நூற்றாண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

நமது இயற்கையான ஒற்றுமையை குலைக்க செயற்கையான வேறுபாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், நமது குடிமக்கள் இந்திய தன்மையின் உணர்வால் தேசிய ஒற்றுமை தீபத்தை ஏற்றி வைத்திருக்கிறார்கள்.

பண்டைய காலம் முதலே இந்திய சித்தாந்தத்தின் தாக்கம் உலகில் பரவியுள்ளது. இந்தியாவின் மத நம்பிக்கைகள், கலை, இசை, தொழில்நுட்பம், மருத்துவ முறைகள், மொழி, இலக்கியம் ஆகியவை உலகம் முழுவதும் பாராட்டப்பட்டுள்ளன. 

லட்சிய வாழ்க்கைக்கான விழுமியங்களை உலக சமுதாயத்திற்கு முதன்முதலில் பரிசளித்தவர்கள் இந்தியத் தத்துவ ஞானிகள். நமது முன்னோர்களின் அந்தப் பெருமைமிகு பாரம்பரியத்தை வலுப்படுத்த வேண்டியது நமது பொறுப்பு. இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற மக்களிடையே தேசம் முதலில் என்ற உணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும். இந்த உணர்வை லோக்மந்தன் பரப்பி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து